கடல் உயிரின அபிவிருத்தி தொடர்பிலான பிராந்தியமாநாடு

கடல் உயிரின அபிவிருத்தி தொடர்பிலான பிராந்திய மாநாடு

by Staff Writer 26-03-2019 | 2:48 PM
Colombo (News 1st) தெற்காசியப் பிராந்தியத்தில் வர்த்தகப் பெறுமதியுடைய கடல் உயிரினங்களை வேகமாக அபிவிருத்தி செய்வது குறித்த பிராந்திய மாநாடு இன்று (26ஆம் திகதி) கொழும்பில் இடம்பெறவுள்ளது. உலகிலுள்ள மக்களில் பெரும்பாலானோரின் வாழ்வாதாரமாக மாறியுள்ளதும் மக்கள் போஷாக்குள்ள உணவைப் பெறும் பிரதான மூலாதாரமாக பரிணமித்துள்ளதுமான கடலுணவுகள் மீது கூடுதல் கவனம் செலுத்துவதே இம்மாநாட்டின் நோக்கமாகும். இந்நிகழ்வில் தெற்காசிய பிராந்தியத்திற்கான கடலுணவை அபிவிருத்தி செய்வதற்கான வேலைத்திட்டம் குறித்து ஆராயப்படவுள்ளது. இந்த மாநாட்டினை இலங்கை கடல்வாழ் உயிரின அபிவிருத்தி அதிகார சபையும், சார்க் விவசாய அமைப்பும் கூட்டாக ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.