ஹமாஸ் அமைப்பின் நிலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்

ஹமாஸ் அமைப்பின் நிலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்

ஹமாஸ் அமைப்பின் நிலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்

எழுத்தாளர் Staff Writer

26 Mar, 2019 | 8:42 am

Colombo (News 1st) காஸா பகுதியிலுள்ள ஹமாஸ் அமைப்பினரின் நிலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடாத்தியுள்ளது.

இந்தத் தாக்குதலில், ஹமாஸ் அமைப்பின் அரசியல் தலைவரின் அலுவலகமும் இராணுவ புலனாய்வு தலைமையகமும் இலக்கு வைக்கப்பட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் தெரிவித்துள்ளன.

இந்தத் தாக்குதல்களில் 7 பேர் காயமடைந்ததாக காஸா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு வடக்காக உள்ள வீடொன்றின் மீது நடத்தப்பட்ட ரொக்கெட் தாக்குதலில் 7 பேர் காயமடைந்தமைக்குப் பதிலாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல் தொடர்பில் ஹமாஸ் அமைப்பை, இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் முன்னர் குற்றஞ்சாட்டியிருந்தன.

அதனைத் தொடர்ந்து இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்