வெலிப்பார கசுன் மற்றும் லால் பபா கைது

வெலிப்பார கசுன் மற்றும் லால் பபா கைது

by Staff Writer 25-03-2019 | 7:11 PM
Colombo (News 1st) திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் தெமட்டகொட சமிந்தவின் உதவியாளர்கள் எனக் கூறப்படும் இருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். 'வெலிப்பார கசுன்' மற்றும் 'லால் பபா' எனும் சந்தேகநபர்கள் இருவரே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். சந்தேகநபர்களிடமிருந்து 50 கிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.