70ஆவது அகவையில் தடம் பதித்தார் ரணில்

ரணிலுக்கு 70! - சிரேஷ்ட அரசியல்வாதிக்கு வாழ்த்துக்கள்

by Fazlullah Mubarak 24-03-2019 | 8:10 PM

Colombo (News 1st) எஸ்மன்ட் விக்ரமசிங்க மற்றும் நாளினி விக்ரமசிங்க ஆகியோருக்கு இரண்டாவது மகனாக, 1949ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்க பிறந்தார்.

கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவரான ரணில் விக்ரமசிங்க, கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீடத்திற்குத் தெரிவாகி சட்டத்தரணியானார். 1977ஆம் ஆண்டு முதல்தடவையாக பியகம தொகுதியில் வெற்றிபெற்று தமது 27ஆவது வயதில் பாராளுமன்றத்திற்குத் தெரிவானார். அந்தக் காலப்பகுதியில் அமைச்சரவை அந்தஸ்துள்ள இளம் அமைச்சராக ரணில் விக்ரமசிங்க திகழ்ந்தார். கல்வி, இளையோர் விவகாரம், தொழில் அமைச்சராகப் பதவி வகித்த ரணில் விக்ரமசிங்க, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தை ஸ்தாபிப்பதற்கும், சுதந்திர வர்த்தக வலயத்தை அமைப்பதற்கும் பங்காற்றினார். நீண்டகாலம் எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகித்தவராகவும் 5 தடவைகள் பிரதமராக பதவி வகித்த பெருமையும் அவரையே சாரும். பிரதமரே! உங்களுக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள்!