போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் மாற்றம்?

போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பில் ஆராய சர்வதேச குழு வருகை

by Staff Writer 24-03-2019 | 2:01 PM
Colombo (News 1st) நாட்டில் முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை மற்றும் அது தொடர்பில் ஆராய்வதற்காக சர்வதேச குழுவொன்று நாளை (25ஆம் திகதி) நாட்டிற்கு வருகைதரவுள்ளது. இதற்காக சர்வதேச போதைப்பொருள் தடுப்புப்பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர். குறித்த குழிவினர், எதிர்வரும் 28 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருந்து, அரசியல் பிரமுகர்கள் மற்றும் பாதுகாப்புப் பிரிவினரை சந்திக்கவுள்ளனர். அண்மையில் ஒஸ்ட்ரியாவின் வியானபா நகரில் இடம்பெற்ற சர்வதேச போதைப்பொருள் தடுப்புப்பிரிவின் மாநாட்டில், இலங்கையில் முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. உலகின் பல நாடுகள் பங்கேற்ற இந்த மாநாடு கடந்த 18 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை நடைபெற்றதுடன், கடந்த வருடத்தில் நாட்டில் கைப்பற்றப்பட்ட ட்ரமடோல் போதைவில்லைகள் தொடர்பில், மாநாட்டில் விசேட கவனம் செலுத்தப்பட்டது. நாட்டில் முன்னெடுக்கப்படும் போதைபொருள் ஒழிப்பு நடவடிக்கைக்காக, சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பு வழங்கப்படும் என மாநாட்டில் தெரிவிக்கப்பட்டதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

ஏனைய செய்திகள்