by Staff Writer 24-03-2019 | 10:26 AM
Colombo (News 1st) ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில், பொலிஸ் உத்தியோகத்தருக்கு இலஞ்சம் வழங்க முற்பட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு பகுதியிலுள்ள நிதி நிறுவனமொன்றினால் தவணை முறையில் பெற்றுக்கொண்ட உழவு இயந்திரம் மற்றும் கார் ஆகியவற்றுக்கு நபரொருவர் தவணைக்கட்டணம் செலுத்தவில்லை என முறைப்பாடு செய்வதற்கே குறித்த சந்தேகநபர் பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்துள்ளார்.
வாகனங்களுக்கான ஆவணங்களுடன் 1,000 ரூபா பணத்தையும் சந்தேகநபர், முறைப்பாடு பதிவு அதிகாரிக்கு வழங்கியுள்ளார்.
எனினும், பணத்தை பெற்றுக்கொள்வதற்கு பொலிஸ் உத்தியோகத்தர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
அட்டளைச்சேனையை சேர்ந்த 72 வயதான ஒருவரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் இன்று ஏறாவூர் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.