பிரெக்ஸிட் குறித்த வாக்கெடுப்பை நடாத்த கோரி பேரணி

பிரெக்ஸிட் தொடர்பில் மீண்டும் வாக்கெடுப்பை நடாத்துமாறு கோரி பேரணி

by Staff Writer 24-03-2019 | 7:59 AM
Colombo (News 1st) பிரெக்ஸிட் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தில் மீண்டும் வாக்கெடுப்பு நடாத்துமாறு கோரி, லண்டனில் பாரிய பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய பாராளுமன்றத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த பேரணியில் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டுள்ளனர். எந்தவொரு பிரெக்ஸிட் ஒப்பந்தத்திற்கும் மக்கள் அபிப்பிராயத்தை பெற்றுக்கொள்வதற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி இந்தப் பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஏற்பாட்டு அமைப்புகள் தெரிவித்துள்ளன. ஐரோப்பிய ஒன்றிய கொடியை ஏந்தியவாறு, பேரணி நடத்தப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகும் பிரித்தானியாவின் தீர்மானத்திற்கு, ஒன்றியத்தின் தலைவர்களால் கடந்த வியாழக்கிழமை கால நீடிப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில், பிரெக்ஸிட் தொடர்பில் பாராளுமன்றத்தில் மீண்டும் வாக்கெடுப்பு நடத்தப்போவதில்லை என பிரித்தானிய பிரதமர் தெரேசா மே அறிவித்திருந்தார். இதனையடுத்து, பிரெக்ஸிட் ஒப்பந்தம் மீதான அழுத்தம் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.