சனிக்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

சனிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 24-03-2019 | 6:14 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. ஊடகத்துறை சார்ந்த விடயங்களில் மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக்கும் ரணில் விக்ரமசிங்க ஆட்சிக்கும் இடையில் எந்த வேறுபாடும் இல்லை என பா.உ. ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார். 02. மாகாண சபையின் அதிகாரத்தைப் பறிப்பதற்கு இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் முயல்வதாக சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றச்சாட்டியுள்ளார். 03. புத்தளம் - அருவக்காட்டில் குப்பை கொட்டுவதற்கு எதிரான மக்களின் அமைதிப் போராட்டம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு புத்தளம் பெரிய பள்ளிவாசல் நிர்வாகம் கவலை தெரிவித்துள்ளது. 04. திரிபீடகத்தை உலக மரபுரிமையாக பிரகடனம் செய்யுமாறு யுனெஸ்கோ அமைப்பிடம் பிரேரணை முன்வைக்கும் தேசிய நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றுள்ளது. 05. ஊடகங்களை தரப்படுத்துதலுடன் மாஃபியா தொடர்புபட்டுள்ளதாக பா.உ. லசந்த அழகியவண்ண குறிப்பிட்டுள்ளார். வௌிநாட்டுச் செய்திகள் 01. 2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ரஷ்ய தலையீடு குறித்த விசேட சட்ட ஆலோசகரின் அறிக்கை வௌியிடப்பட்டுள்ளது. 02. சீனாவின் மத்திய பிராந்தியத்தில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச்சென்ற பஸ்ஸொன்று தீப்பற்றியதில் 26 பேர் உயிரிழந்துள்ளதுடன், 30 பேர் காயமடைந்துள்ளனர். விளையாட்டுச் செய்திகள் 01. இலங்கையின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான லசித் மாலிங்க இந்தத் தடவை IPL இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் சில போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 02. இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது சர்வதேச இருபதுக்கு 20 போட்டியில், 16 ஓட்டங்களால் தென்னாபிரிக்கா வெற்றிபெற்றுள்ளது.