மோடிக்கே சவாலா: களமிறங்கும் 111 விவசாயிகள்

மோடிக்கே சவாலா: களமிறங்கும் 111 விவசாயிகள்

மோடிக்கே சவாலா: களமிறங்கும் 111 விவசாயிகள்

எழுத்தாளர் Fazlullah Mubarak

24 Mar, 2019 | 8:12 pm

Colombo (News 1st) இந்திய பாராளுமன்றத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து தமிழக விவசாயிகள் 111 பேர் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இந்திய பாராளுமன்றத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 11ஆம் திகதி முதல் மே மாதம் 19ஆம் திகதி வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது.

இந்தத் தேர்தலில், உத்தரபிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் போட்டியிடுவதுடன், அந்தத் தொகுதியில் எதிர்வரும் மே 19ஆம் திகதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

இந்தநிலையில், பிரதமர் மோடியை எதிர்த்து 111 தமிழக விவசாயிகள் வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளதாக தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு கூறியுள்ளார்.

நெல்லுக்கான உரியவிலை கிடைக்காமை மற்றும் விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமையால் விவசாயிகள் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்