அர்ஜூன மஹேந்திரனின் ஆவணங்கள் சிங்கப்பூர் கைகளில்

அர்ஜூன மஹேந்திரனின் ஆவணங்கள் சிங்கப்பூர் கைகளில்

அர்ஜூன மஹேந்திரனின் ஆவணங்கள் சிங்கப்பூர் கைகளில்

எழுத்தாளர் Fazlullah Mubarak

24 Mar, 2019 | 8:07 pm

Colombo (News 1st) மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரனை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான சில ஆவணங்களை, சிங்கப்பூருக்கு அனுப்புவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக, சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கத்திடமிருந்து மேலும் சில ஆவணங்கள் தேவைப்படுவதாக அறிவிக்கப்பட்டமைக்கு அமைய, அவற்றை தயாரிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் குறிப்பிட்டார்.

அர்ஜூன மகேந்திரனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் உள்ளிட்ட விடயங்கள் அடங்கிய சில ஆவணங்களை சிங்கப்பூர் அரசாங்கம் கோரியுள்ளது.

இதற்கு முன்னர் அனுப்பப்பட்ட ஆவணங்களுக்கு மேலதிகமாக, இந்த ஆவணங்கள் அனுப்பப்படவுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் குறிப்பிட்டது.

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரை இலங்கைக்கு அழைத்து வருவதற்காக கோரப்படும் அந்த ஆவணங்களை, வௌிவிவகார அமைச்சினூடாக விரைவில் அனுப்புவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் சட்டமா அதிபர் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

மத்திய வங்கி முறிகள் கொடுக்கல் வாங்கல் மற்றும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரை இலங்கைக்கு அழைத்துவருவது தொடர்பில் செயற்பட்டுவரும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் விசேட குழுவினால் இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக, திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சட்டமா அதிபர் திணைக்களம் இந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதைப்போன்று, முறிகள் ஆணைக்குழுவின் அறிக்கையை வெிளியிடுவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டுமல்லவா?

அந்த அறிக்கையை தமது மடியில் வைத்திருக்காமல், அது எப்போது மக்களுக்கு வௌிப்படுத்தப்படும் என்பது தொடர்பில் மக்கள் விழிப்புடன்…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்