திரிபீடகத்தை உலக மரபுரிமையாக பிரகடனம் செய்யுமாறு யுனெஸ்கோவிடம் பிரேரணை முன்வைப்பு

by Staff Writer 23-03-2019 | 7:04 PM
Colombo (News 1st) திரிபீடகத்தை உலக மரபுரிமையாக பிரகடனம் செய்யுமாறு யுனெஸ்கோ (UNESCO) அமைப்பிடம் பிரேரணை முன்வைக்கும் தேசிய நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கண்டியில் இன்று நடைபெற்றது. கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மகாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட மகா சங்கத்தினர் பிரசன்னமாகியிருந்தனர். எந்தவொரு அரச தலைவரும் நாட்டிற்காக நிறைவேற்ற முடியாத வரலாற்று சிறப்புமிக்க செயற்பாட்டை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுத்துள்ளதாக இதன்போது ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர், அமைச்சர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார். திரிபீடகம் தொடர்பான விசேட அறிக்கையொன்றும் நினைவு முத்திரையொன்றும் வௌியிடப்பட்டது. திரிபீடகத்தை உலக மரபுரிமையாக பிரகடனப்படுத்தும் பிரேரணையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யுனெஸ்கோ அமைப்பிடம் கையளித்தார்.