ரைகம் தொலைக்காட்சி விருதுகளை சுவீகரித்த நியூஸ்ஃபெஸ்ட் மற்றும் சிரச தொலைக்காட்சி

ரைகம் தொலைக்காட்சி விருதுகளை சுவீகரித்த நியூஸ்ஃபெஸ்ட் மற்றும் சிரச தொலைக்காட்சி

ரைகம் தொலைக்காட்சி விருதுகளை சுவீகரித்த நியூஸ்ஃபெஸ்ட் மற்றும் சிரச தொலைக்காட்சி

எழுத்தாளர் Bella Dalima

23 Mar, 2019 | 10:05 pm

Colombo (News 1st) ரைகம் தொலைக்காட்சி விருது வழங்கல் விழாவில் நியூஸ்ஃபெஸ்ட் மற்றும் சிரச தொலைக்காட்சி பல விருதுகளை சுவீகரித்துக்கொண்டுள்ளன.

கொழும்பு தாமரைத்தடாகம் கலையரங்கில் நடைபெற்ற இந்த விருது வழங்கல் விழாவில் சிறந்த தொலைக்காட்சி கலந்துரையாடலுக்கான விருதை நியூஸ்ஃபெஸ்ட்டின் ”கம்மெத்த” நிகழ்ச்சி தன்வசமாக்கியது.

ரைகம் தொலைக்காட்சி விருது வழங்கல் விழாவில் ஆங்கில மொழி மூல சிறந்த தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளருக்கான விருதை நியூஸ்பெஸ்ட்டின் பேர்னடீன் ஜயசிங்க பெற்றுக்கொண்டார்.

இதேவேளை, சிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளருக்கான விருதை சிரச தொலைக்காட்சி அறிவிப்பாளரும் நியூஸ்ஃபெஸ்ட்டின் செய்தி வாசிப்பாளருமான சானு திசாநாயக்க வெற்றி பெற்றார்

இதேவேளை, வருடத்தின் சிறந்த ரியாலிட்டி நிகழ்ச்சியாக ”Sri Lanka’s Got Talent” விருதுக்கு பாத்திரமானது.

இந்த விருதுகள் உள்ளிட்ட சகல விருதுகளுடனும் சிறந்த நிகழ்ச்சிகளுடனும் கூடிய தொலைக்காட்சிஅலைவரிசையாக சிரச தொலைக்காட்சி மற்றும் தெரண தொலைக்காட்சி ஆகியன சம விருதுகளைப் பெற்றன.

அத்துடன், சிரச தெலைக்காட்சியில் ஔிபரப்பாகும் ”சுலங் குருல்லோ” சிறந்த இசை நிகழ்ச்சிக்கான விருதையும் சிறந்த நாடக நடிகருக்கான விசேட ஜூரி விருதை சிரச தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ”மினிகங்தேல” நாடகத்தின் இயக்குநரும் நடிகருமான சரித் அபேசிங்க பெற்றுக்கொண்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்