சீனாவில் சுற்றுலாப் பயணிகளின் பஸ் தீப்பற்றியதில் 26 பேர் உயிரிழப்பு, 30 பேர் காயம்

சீனாவில் சுற்றுலாப் பயணிகளின் பஸ் தீப்பற்றியதில் 26 பேர் உயிரிழப்பு, 30 பேர் காயம்

சீனாவில் சுற்றுலாப் பயணிகளின் பஸ் தீப்பற்றியதில் 26 பேர் உயிரிழப்பு, 30 பேர் காயம்

எழுத்தாளர் Bella Dalima

23 Mar, 2019 | 5:01 pm

சீனாவின் மத்திய பிராந்தியத்தில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச்சென்ற பஸ்ஸொன்று தீப்பற்றியதில் 26 பேர் உயிரிழந்துள்ளதுடன், 30 பேர் காயமடைந்துள்ளனர்.

சீனாவின் குனன் மாநிலம் வழியாகப் பயணித்துக் கொண்டிருந்த பஸ் ஒன்றிலேயே தீப்பற்றியுள்ளது.

குறித்த பஸ்ஸில் இரண்டு சுற்றுலா வழிகாட்டிகள், சாரதிகள், 53 சுற்றுலாப் பயணிகள் என 56 பேர் பயணித்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, காயமடைந்தவர்களில் 5 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதுடன், ஏனையவர்களுக்கும் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக வைத்தியசாலை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்