ஊடக தரப்படுத்தலில் மாஃபியா தொடர்புபட்டுள்ளது: லசந்த அழகியவண்ண 

ஊடக தரப்படுத்தலில் மாஃபியா தொடர்புபட்டுள்ளது: லசந்த அழகியவண்ண 

ஊடக தரப்படுத்தலில் மாஃபியா தொடர்புபட்டுள்ளது: லசந்த அழகியவண்ண 

எழுத்தாளர் Bella Dalima

23 Mar, 2019 | 5:18 pm

Colombo (News 1st) ஊடகங்களை தரப்படுத்துவது தொடர்பில் இன்று பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது.

தரப்படுத்தலுடன் மாஃபியா தொடர்புபட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவண்ண இன்றைய விவாதத்தின் போது குறிப்பிட்டார்.

நாடளாவிய ரீதியில் தனியார் நிறுவனமொன்று சுமார் 300 குடும்பங்களுக்கு தொலைக்காட்சிகளை வழங்கி, அவர்கள் தொலைக்காட்சி பார்க்கும் விதத்தைக் கொண்டு தொலைக்காட்சி அலைவரிசைகள் குறித்து மதிப்பீடு செய்யப்படுவதாக லசந்த அழகியவண்ண தெரிவித்தார்.

ஆகையால், இந்த தரப்படுத்தல் முறை பொது மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்று அல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அரசாங்கம் இவ்விடயத்தில் தலையீடு செய்யாவிட்டால், சில ஊடக நிறுவனங்கள் இந்த தரப்படுத்தலை தமது நன்மைக்காக பயன்படுத்துவார்கள் என லசந்த அழகியவண்ண மேலும் குறிப்பிட்டார்.

இதனால் ஊடகத் தரப்படுத்தல் குறித்து இணக்கம் தெரிவிக்க முடியாது எனவும் பாராளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவண்ண குறிப்பிட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்