யாழ். மாநகர சபைக்கு கழிவகற்றல் வாகனங்கள்

யாழ். மாநகர சபைக்கு கழிவகற்றல் வாகனங்களைப் பெற்றுக்கொடுக்க ஜப்பான் நிதியுதவி

by Staff Writer 22-03-2019 | 5:10 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணத்திற்கு கழிவகற்றும் வண்டிகளை கொள்வனவு செய்வதற்காக ஜப்பான் நிதியுதவி வழங்கியுள்ளது. சுமார் 15 மில்லியன் ரூபா நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கையிலுள்ள ஜப்பான் தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். மாநகர சபைக்கு 4 புதிய கழிவகற்றல் வாகனங்களைப் பெற்றுக்கொடுக்கும் திட்டமாக இது முன்னெடுக்கப்படவுள்ளது. யாழ். மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் தினமும் 70 மில்லியன் தொன் கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. எனினும், 20 மில்லியன் தொன் கழிவுகள் உரியமுறையில் சேகரிக்கப்படுவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.