மக்கள் விடுதலை முன்னணி பிரதமருடன் பேச்சுவார்த்தை

மக்கள் விடுதலை முன்னணி பிரதமருடன் பேச்சுவார்த்தை

by Staff Writer 22-03-2019 | 5:22 PM
Colombo (News 1st) மக்கள் விடுதலை முன்னணியின் தலைவருக்கும் பிரதமருக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. பாராளுமன்ற கட்டடத் தொகுதியிலுள்ள பிரதமரின் அலுவலகத்தில் இன்று பிற்பகல் 2.15 அளவில் சந்திப்பு நடைபெற்றுள்ளது. இந்த சந்திப்பில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்கவும் பாராளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸவும் பங்குபற்றியுள்ளனர். மக்கள் விடுதலை முன்னணி 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் ஏற்கனவே எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தது. இந்நிலையிலேயே மக்கள் விடுதலை முன்னணி பிரதமருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.