நாமல் ராஜபக்ஸவிற்கு எதிரான பயணத்தடை நீக்கம்

நாமல் ராஜபக்ஸ உள்ளிட்ட ஐவருக்கு எதிரான பயணத்தடை நீக்கம்

by Staff Writer 22-03-2019 | 4:13 PM
Colombo (News 1st) பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ உள்ளிட்ட 5 பிரதிவாதிகளுக்கு எதிராக கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டிருந்த வௌிநாட்டு பயணத்தடையை முழுமையாக நீக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன இன்று உத்தரவிட்டுள்ளார். எனினும், சந்தேகநபர்கள் வௌிநாட்டிற்கு செல்வது தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவிற்கு, இன்றைய தினம் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவினூடாக எவ்வித பாதிப்புகளும் ஏற்படாது என நீதவான் அறிவித்துள்ளார். நாமல் ராஜபக்ஸவிற்கு சொந்தமான Gowers Corporate Services நிறுவனமானது ஏனைய நிறுவனங்களுடன் முன்னெடுத்த கொடுக்கல் வாங்கல்களின் போது முறையற்ற விதத்தில் நிதி திரட்டியமை மற்றும் தமது பாராளுமன்ற உறுப்பினர் பதவியினூடாக நிறுவனமொன்றை கொள்வனவு செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த குற்றச்சாட்டுகளை அடிப்படையாகக் கொண்டு நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.