யாழ். மாநகர சபைக்கு கழிவகற்றல் வாகனங்களைப் பெற்றுக்கொடுக்க ஜப்பான் நிதியுதவி

யாழ். மாநகர சபைக்கு கழிவகற்றல் வாகனங்களைப் பெற்றுக்கொடுக்க ஜப்பான் நிதியுதவி

யாழ். மாநகர சபைக்கு கழிவகற்றல் வாகனங்களைப் பெற்றுக்கொடுக்க ஜப்பான் நிதியுதவி

எழுத்தாளர் Staff Writer

22 Mar, 2019 | 5:10 pm

Colombo (News 1st) யாழ்ப்பாணத்திற்கு கழிவகற்றும் வண்டிகளை கொள்வனவு செய்வதற்காக ஜப்பான் நிதியுதவி வழங்கியுள்ளது.

சுமார் 15 மில்லியன் ரூபா நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கையிலுள்ள ஜப்பான் தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். மாநகர சபைக்கு 4 புதிய கழிவகற்றல் வாகனங்களைப் பெற்றுக்கொடுக்கும் திட்டமாக இது முன்னெடுக்கப்படவுள்ளது.

யாழ். மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் தினமும் 70 மில்லியன் தொன் கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன.

எனினும், 20 மில்லியன் தொன் கழிவுகள் உரியமுறையில் சேகரிக்கப்படுவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்