மொனராகலையில் எரிந்த கெப் வண்டியிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

மொனராகலையில் எரிந்த கெப் வண்டியிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

மொனராகலையில் எரிந்த கெப் வண்டியிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

எழுத்தாளர் Staff Writer

22 Mar, 2019 | 3:38 pm

Colombo (News 1st) ​மொனராகலை – ஹொரம்புவ பகுதியில் எரிந்த கெப் வண்டியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கெப் வண்டியில் இன்று அதிகாலையில் தீ பரவியதாகவும் அதில் பயணித்தவர் எரிந்து உயிரிழந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

மொனராகலை – ஹுலந்தாவ பகுதியை சேர்ந்த 50 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் மொனராகலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மொனராகலை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்