மக்கள் சக்தியின் மற்றுமோர் கட்டம் நுவரெலியாவில் ஆரம்பம்

மக்கள் சக்தியின் மற்றுமோர் கட்டம் நுவரெலியாவில் ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

22 Mar, 2019 | 9:57 pm

Colombo (News 1st) மக்கள் சக்தியின் மக்கள் நேயப் பணிகளின் மற்றுமோர் கட்டம் நுவரெலியாவில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நுவரெலியா – ஹாவாஎலிய பிரதேசத்தில் அமைந்துள்ள பரிசுத்த திருத்துவ ஆரம்ப பிரிவு பாடசாலையில் 500-க்கும் அதிக மாணவர்கள் கல்வி பயில்கின்றனர்.

இப்பாடசாலையின் கழிவறைத் தொகுதி பல வருடங்களாக புனர்நிர்மாணம் செய்யப்படாததால், மாணவர்கள் பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்தனர்.

இது தொடர்பில் தொடர்ந்து அதிகாரிகளுக்கு தௌிவூட்டப்பட்டபோதிலும் சாதகமான பதில்கள் கிடைக்காமையால் மக்கள் சக்திக்கு பாடசாலை நிர்வாகத்தினர் தெரியப்படுத்தினர்.

முழுமையான கழிவகற்றல் தொகுதியொன்றை அமைப்பதற்கான வேலைத்திட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த வேலைத்திட்டத்திற்கு வர்த்தகர் மொஹமட் ரியாஸ் நிதியுதவி வழங்கியுள்ளார்.

நுவரெலிய மேலதிக கல்வி பணிப்பாளர் எஸ்.மோகன்ராஜ் தலைமையில் நிகழ்வுகள் இடம்பெற்றன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்