புத்தளத்தில் பெரும்போக நெல் அறுவடை ஆரம்பம்

புத்தளத்தில் பெரும்போக நெல் அறுவடை ஆரம்பம்: நிர்ணய விலை அறிவிக்கப்படாததால் விவசாயிகளுக்கு நட்டம்

by Staff Writer 21-03-2019 | 5:01 PM
Colombo (News 1s) புத்தளம் மாவட்டத்தின் பல பகுதிகளில் பெரும்போக நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எனினும், அரசாங்கம் நெல்லுக்கான நிர்ணய விலையை அறிவிக்காததால், தனியார் துறையினர் 30 ரூபாவுக்கு நெல்லை கொள்வனவு செய்வதாக விவசாயிகள் தெரிவித்தனர். புத்தளம் மற்றும் மதுரங்குளி ஆகிய கமநல கேந்திர மத்திய நிலையத்திற்குட்பட்ட பிரதேசங்களில் நெல் களஞ்சியசாலைகள் இல்லாததால், அறுவடை செய்யும் நெல்லை களஞ்சியப்படுத்த முடியாமல் உள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர். ஒரு கிலோ நாட்டரிசி 75 ரூபாவிற்கும் சம்பா அரிசி 90 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகின்ற போதிலும் நாட்டரிசி மற்றும் சம்பா நெல்களை தனியார் 30 ரூபாய்க்கு கொள்வனவு செய்து வருவதாக விவசாயிகள் சுட்டிக்காட்டினர்.