புதன்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 21-03-2019 | 6:08 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. காணாமல்போனோருக்கான அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டதையும் நட்டஈடு வழங்குவதற்கான அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டதையும் பாராட்டுவதாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் தெரிவித்துள்ளார். 02. மத்திய வங்கியின் முறிகள் மோசடி தொடர்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு, தற்போது சிங்கப்பூரிலுள்ளதாக சந்தேகிக்கப்படும் அர்ஜூன மகேந்திரனை இலங்கைக்கு நாடு கடத்த முடியாமல்போயுள்ளமை தொடர்பில் ஜனாதிபதி அதிருப்தி தெரிவித்துள்ளார். 03. இலங்கையின் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் செயற்பாடுகள் தொடர்பில் காலவரையறை அடங்கிய திட்டமொன்றை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 04. நாடளாவிய ரீதியில் கடந்த 6 நாட்களில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளில், 29,275 சாரதிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 05. கடுவெல – பிட்டுகல பகுதியில், பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ‘கடுவெல பபி’ என அழைக்கப்படும் இசுறு சமிந்த சமரதுங்க கைது செய்யப்பட்டுள்ளார். 06. தலைமன்னார் – ஊருமலை கடற்கரையோரத்திலிருந்து சுமார் 150 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. வௌிநாட்டுச் செய்திகள் 01. வருடாந்தம் தமது நாட்டில் குடியேற அனுமதிக்கும் புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கையை, அவுஸ்திரேலியா சுமார் 15 வீதமாகக் குறைத்துள்ளது. 02. ஒழுங்கமைக்கப்பட்ட பிரெக்ஸிட்டுக்காகத் தாம் இறுதி மணித்தியாலம் வரை போராடப்போவதாக, ஜேர்மன் சான்ஸலர் ஏஞ்சலா மேர்க்கல் (Angela Merkel) தெரிவித்துள்ளார். விளையாட்டுச் செய்திகள் 01. ஆசிய பசுபிக் வலய பவர் லிப்டிங் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்ற இலங்கை அணி நாடு திரும்பியுள்ளது. 02. இலங்கைக்கு எதிரான முதல் சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் தென் ஆபிரிக்கா சுப்பர் ஓவரில் வெற்றிபெற்றது.