அர்ஜூன மகேந்திரன் குறித்து தகவல் அனுப்பாதது ஏன்? 

அர்ஜூன மகேந்திரன் தொடர்பான தகவல்களை சிங்கப்பூருக்கு அனுப்பாதது ஏன்: உதய கம்மன்பில கேள்வி

by Bella Dalima 21-03-2019 | 8:16 PM
Colombo (News 1st) மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன் தொடர்பான சிங்கப்பூரின் பதில் குறித்து பாராளுமன்றத்தில் இன்று விவாதிக்கப்பட்டது. இதன்போது, அர்ஜூன மகேந்திரனை அழைத்து வருவதற்கான தகவல்களை சிங்கப்பூருக்கு அனுப்பாமை தொடர்பில் நீதி அமைச்சரிடம் உதய கம்மன்பில விளக்கம் கோரினார். சரணடைதல் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் விடயதானம் நீதி அமைச்சிடமே உள்ள நிலையில், அமைச்சர் தலதா ஏன் அதனை செய்யவில்லை என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கேள்வி எழுப்பினார். சர்வதேச பொலிஸாரின் ஊடாக கைது செய்யுமாறு வழங்கப்பட்ட நீதிமன்ற உத்தரவு சிங்கப்பூர் அரசாங்கத்திற்கு கிடைக்கவில்லை என்பதே புலப்படுவதாகவும் உதய கம்மன்பில குறிப்பிட்டார்.
அர்ஜூன் அலோசியஸூடன் அவருக்கு தொடர்பு இல்லாத போதிலும், அரசாங்கத்தின் முக்கிய இடங்களில் அர்ஜூன் அலோசியஸின் நண்பர்களுள்ளனர். அதனால் அமைச்சர் தலதா மீது ஏதேனும் அழுத்தங்கள் காணப்படலாம். இது அபாயகரமான நிலையாகும். அவரைப் போன்ற தேவையான நபர் ஒருவர் இந்நாட்டில் இல்லை. சிங்கப்பூர் அரசாங்கத்திற்கு அறிவிப்பதை தடுக்கும் நபர் யார் என்பதை அமைச்சர் தலதா இந்த சபைக்கு உடனடியாக அறிவிக்க வேண்டும்.
என உதய கம்மன்பில சபையில் கோரினார்.