விசேட பிரதேச அபிவிருத்தி அமைச்சிற்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்படாமை தொடர்பில் வேலுகுமார் கேள்வி

விசேட பிரதேச அபிவிருத்தி அமைச்சிற்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்படாமை தொடர்பில் வேலுகுமார் கேள்வி

எழுத்தாளர் Bella Dalima

21 Mar, 2019 | 8:57 pm

Colombo (News 1st) விசேட பிரதேச அபிவிருத்தி அமைச்சிற்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்படாமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் எம். வேலுகுமார் சபையில் இன்று கேள்வி எழுப்பினார்.

விசேட பிரதேச அபிவிருத்தி அமைச்சிற்கு பாரிய வேலைத்திட்டமொன்றுள்ள போதும், அந்த அமைச்சு விடயதானங்கள் அற்றவொரு அமைச்சாகவே காணப்படுவதாக எம். வேலுகுமார் சுட்டிக்காட்டினார்.

சமூக, பொருளாதார ரீதியில் விசேட கவனம் செலுத்த வேண்டிய தேவை காணப்படும் மக்கள் வாழும் பிரதேசத்திற்கான அமைச்சு ஒன்றை உருவாக்கும் போது, அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான விடயதானங்கள் உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்