”துறைமுகம் போன்றில்லை வானத்தையும் விற்கவேண்டிவரும்” – எதிர்க்கட்சித் தலைவர்

”துறைமுகம் போன்றில்லை வானத்தையும் விற்கவேண்டிவரும்” – எதிர்க்கட்சித் தலைவர்

”துறைமுகம் போன்றில்லை வானத்தையும் விற்கவேண்டிவரும்” – எதிர்க்கட்சித் தலைவர்

எழுத்தாளர் Staff Writer

21 Mar, 2019 | 8:32 am

Colombo (News 1st) துறைமுகம் போன்றில்லை வானத்தையும் அவர்களுக்கு விற்பனை செய்ய வேண்டிவரும் என, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

தங்காலை பிரதேச சபையில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட இரண்டு மாடி கட்டடம் நேற்று (20ஆம் திகதி) திறந்துவைக்கப்பட்டது.

இந்நிகழ்வு எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஸ தலைமையில் இடம்பெற்றது.

400 இலட்சம் ரூபா செலவில் இந்த கட்டடம் நிர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது,

துறைமுகம் விற்பனை செய்யப்பட்டது. நாங்கள் கடன் வாங்கினோம். கடன் அதிகம் என்றனர். அதனை விற்பணை செய்வதாக இருந்தால் கடனை செலுத்துங்கள். சீனாவுக்கு கடனை செலுத்துங்கள். அவ்வாறு செய்யவில்லை. இந்தியாவிற்கு விமான நிலையத்தை விற்றனர். துறைமுகம் போன்றில்லை வானத்தையும் அவர்களுக்கு விற்பனை செய்ய வேண்டிவரும். இது நாட்டையும் விற்பனை செய்யும் நிலை. நுரைச்சோலை அனல்மின் நிலையத்தை நான் அமைக்காவிடின் மக்கள் இருளில் தான் இருந்திருக்க வேண்டும். அதிக பணம் செலுத்தி மின்சாரத்தைப் பெற்றுகொள்ள வேண்டியிருக்கும்

என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்