தலைமன்னாரில் 912 கிலோ பீடிசுற்றும் இலைகள் மீட்பு

by Staff Writer 21-03-2019 | 9:38 AM
Colombo (News 1st) தலைமன்னார் வௌிச்சவீட்டிற்கு, 5 கடல்மைல் தொலைவில் 912 கிலோகிராம் பீடி சுற்றும் இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, இலங்கை கடற்படை அறிவித்துள்ளது. 32 மற்றும் 38 வயதான மன்னார் - பேசாலை பகுதியை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். 27 மூடைகளில் பொதியிடப்பட்டு, டிங்கி படகொன்றில் இவை கொண்டுவரப்பட்டபோதே கைப்பற்றப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். கைப்பற்றப்பட்ட பீடி சுற்றும் இலைகள் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டிருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகின்றது. இதனையடுத்து, சந்தேகநபர்களையும் கைப்பற்றப்பட்ட பீடி சுற்றும் இலைகளையும் யாழ்ப்பாணம் சுங்கத் திணைக்களத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்