நெல் விலை வீழ்ச்சி; விவசாயிகள் பாதிப்பு

நெல் விலை வீழ்ச்சி; விவசாயிகள் பாதிப்பு

by Staff Writer 20-03-2019 | 12:02 PM
Colombo (News 1st) நெல்லுக்கான விலை வீழ்ச்சியடைந்துள்ளமையால், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும்போக நெல் அறுவடை நிறைவடைந்தநிலையில் நெல்லிற்குரிய விலை கிடைக்காமையால் விவசாயிகள் நெல்லை குறைந்த விலைக்கு விற்பனை செய்கின்றனர். அரசாங்கம் நெல்லுக்கான நிர்ணய விலையை அறிவிக்காமையால் தனியார் குறைந்தவிலையில் நெல்லை கொள்வனவு செய்வதாக விசாயிகள் கூறுகின்றனர். யாழ். மாவட்டத்தில் நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஒரோயொரு நெல் கொள்வனவு நிலையம் காணப்படுவதால் நெல்லைக் கொண்டுசெல்வதற்கு அதிகளவான போக்குவரத்து கூலியை செலவிட வேண்டியுள்ளதாகவும் விவசாயிகள் குறிப்பிட்டுள்ளனர். ஒரு கிலோகிராம் நட்டரிசி 90 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றபோதிலும், ஒரு கிலோகிராம் நெல்லுக்கான விலை 30 ரூபாவாகவே உள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.