29,275 சாரதிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்

நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு: 29,275 சாரதிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்

by Staff Writer 20-03-2019 | 3:50 PM
Colombo (News 1st) கடந்த 6 நாட்களில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது, 29,275 சாரதிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவர்களில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 1321 பேர் உள்ளடங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கு அமைய, கடந்த 14 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டார். வீதி விதிமுறைகளை மீறிய 3,472 பேரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட போது, வீதியோரமாக வாகனங்களை நிறுத்திச்சென்ற 1830 சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார். ஏனைய போக்குவரத்து குற்றங்கள் தொடர்பில் 17,652 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார். எதிர்வரும் தமிழ் சிங்கள புதுவருடப் பிறப்பு நிறைவடையும் வரை நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர மேலும் தெரிவித்தார்.