அங்கொட லொக்காவின் உதவியாளர் 'கடுவெல பபி' கைது

அங்கொட லொக்காவின் உதவியாளரான 'கடுவெல பபி' கைது

by Staff Writer 20-03-2019 | 1:17 PM
Colombo (News 1st) கடுவெல - பிட்டுகல பகுதியில், பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான 'கடுவெல பபி' என அழைக்கப்படும் இசுறு சமிந்த சமரதுங்க கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடமிருந்து சுமார் 600 கிராம் ஹெரொயின் மற்றும் ஒரு கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். குறித்த சந்தேகநபர், திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் அங்கொட லொக்காவின் உதவியாளர் என தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஏனைய செய்திகள்