ஹம்பாந்தோட்டையில் மேற்கொள்ளப்படவுள்ள இரு முதலீடுகள்

ஹம்பாந்தோட்டையில் மேற்கொள்ளப்படவுள்ள இரு முதலீடுகள்

எழுத்தாளர் Staff Writer

20 Mar, 2019 | 1:21 pm

Colombo (News 1st) ஹம்பாந்தோட்டையில் மேற்கொள்ளப்படவுள்ள இரண்டு முதலீடுகள் தொடர்பில் விளக்களிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று கொழும்பில் இடம்பெற்றது.

3,850 மில்லியன் டொலர் வௌிநாட்டு நேரடி முதலீட்டில் சில்வர் பார்க் இன்ர்நெஷனல் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இது ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நிர்மாணிக்க செலவிடப்பட்ட நிதியை விட 3 மடங்கு அதிகமானது. 1967 ஆம் ஆண்டு தான் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தொடர்பிலான பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. சப்புஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தைப் போன்று 5 மடங்கான வௌியீடு இங்குள்ளது. இதனூடாக நாளொன்றிற்கு 2 இலட்சம் பரல்கள் உற்பத்தி செய்யமுடியும். இதன் பணிகளை எதிர்வரும் 44 மாதங்களில் நிறைவுசெய்வதற்கு எதிர்பார்த்துள்ளோம். இந்த நிறுவனம் 70 வீதம் சிங்கப்பூருக்கு உரித்தான அதேநேரம், 70 வீதம் ஓமானுக்கும் உரித்தானது

என அமைச்சர் நளீன் பண்டார இதன்போது தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்