தலைமன்னார் – ஊருமலையில் 150 கிலோ கேரள கஞ்சா மீட்பு

தலைமன்னார் – ஊருமலையில் 150 கிலோ கேரள கஞ்சா மீட்பு

எழுத்தாளர் Staff Writer

20 Mar, 2019 | 1:07 pm

Colombo (News 1st) தலைமன்னார் – ஊருமலை கடற்கரையோரத்திலிருந்து சுமார் 150 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

கரையோரப்பகுதியில் மறைத்துவைக்கப்பட்டிருந்த 5 மூடைகளை இன்று காலை சோதனையிட்டபோதே கேரள கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டதாக, கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த 5 மூடைகளிலும் பொதியிடப்பட்டவாறு கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்