இலங்கையின் மின்சார உற்பத்தியில் மாற்றம்

மின் உற்பத்தியின் 60 வீதத்தை புதுப்பிக்கத்தக்க மின்வலு தோற்றுவாய்கள் மூலம் மேற்கொள்ள நடவடிக்கை

by Staff Writer 19-03-2019 | 5:33 PM
Colombo (News 1st) 2030 ஆம் ஆண்டளவில் இலங்கையின் மின் உற்பத்தியின் 60 சதவீதத்தை புதுப்பிக்கத்தக்க மின்வலு தோற்றுவாய்கள் மூலம் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதனடிப்படையில், சூரியசக்தி மறுமலர்ச்சி என்ற வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வவுனியா, வாழைச்சேனை உள்ளிட்ட ஐந்து இடங்களில் 28 சூரிய மின்சக்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. இந்தத் திட்டத்திற்காக 28 முதலீட்டாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.