மன்னார், கம்பஹாவில் நாளை கடும் வெப்பம் நிலவும்

மன்னார், கம்பஹா மாவட்டங்களில் நாளை கடும் வெப்பம் நிலவும்

by Staff Writer 19-03-2019 | 3:49 PM
Colombo (News 1st) வடமேல் மாகாணத்திலும் மன்னார் மற்றும் கம்பஹா மாவட்டங்களிலும் நாளை (20) வெப்பமான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதிக வெப்பம் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. அதிக நீர் பருகுவதுடன் நிழலான இடங்களில் தங்கியிருக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.