நாலக்க டி சில்வாவிற்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

நாலக்க டி சில்வாவிற்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

by Staff Writer 19-03-2019 | 3:26 PM
Colombo (News 1st) பிரமுகர் கொலை சதி முயற்சி தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக்க டி சில்வா எதிர்வரும் 26 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்க முன்னிலையில் சந்தேகநபரை ஆஜர்படுத்தியதை அடுத்து விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாலக்க டி சில்வாவிற்கு எதிரான குற்றப்பத்திரத்தை தயாரிப்பதற்கு தேவையான சாட்சியங்கள் அடங்கிய அறிக்கை இன்று நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது. குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பாரிய கொலைக்குற்றங்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் பிரிவின் பொறுப்பதிகாரி இன்ஸ்பெக்டர் ரஞ்சித் முனசிங்கவால் குறித்த அறிக்கை நீதிமன்றத்திற்கு இன்று சமர்ப்பிக்கப்பட்டது.