நாட்டின் பல பகுதிகளில் மின் விநியோகத் தடை

நாட்டின் பல பகுதிகளில் மின் விநியோகத் தடை

by Staff Writer 19-03-2019 | 11:19 AM
Colombo (News 1st) அத்துருகிரியவிலிருந்து கொலன்னாவ க்றீட் உப மின்நிலையம் வரை 122 மெகாவோல்ட் மின்சாரத்தைக் கொண்டுசெல்லும் கடத்திகளில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக பல பகுதிகளுக்கு மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளது. இன்று காலை 8.15 மணியளவில் இந்தத் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக மின்சக்தி மற்றும் மீள் புதுப்பிக்கதக்க சக்திவள அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்காரணமாக அம்பாறை, குருணாகல் மற்றும் நுவரெலியா உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளது. மின்கடத்தியில் ஏற்பட்டுள்ள கோளாறுகளை சீர்செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஸன ஜயவர்தன தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், மின்கடத்தியில் ஏற்பட்டுள்ள கோளாறுக்கும் நுரைச்சோலை மின்உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட கோளாறுக்கும் இடையில் எவ்விதத் தொடர்பும் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.