முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை நிறைவு

ஜனாதிபதி ஆணைக்குழுவின் முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்றுடன் நிறைவு

by Staff Writer 19-03-2019 | 6:53 AM
Colombo (News 1st) அரச நிறுவனங்களில் கடந்த 4 வருடங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவடைகின்றன. இதன்படி, இன்று மாலை 5 மணி வரை முறைப்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்படும் என ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்தநிலையில், இதுவரையில் 950 முறைப்பாடுகள் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்றுள்ளன. அவற்றில் 31 முறைப்பாடுகள் ஆரம்பகட்ட விசரணைகளுக்காக விசேட பொலிஸ் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளில் பெரும்பாலானவை அரச நிறுவனங்களின் உயரதிகாரிகள் மீதே முன்வைக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பல மில்லயன் ரூபா மோசடி செய்தமை தொடர்பில் உயரதிகாரிகள் மீது முறைg;பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. கிடைத்துள்ள முறைg;பாடுகளுக்கு அமைய, அரசியல்வாதிகளை விட அரச அதிகாரிகள் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளதாகவும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.