சமூக வலைத்தளங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் – அவுஸ்திரேலிய பிரதமர்

சமூக வலைத்தளங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் – அவுஸ்திரேலிய பிரதமர்

சமூக வலைத்தளங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் – அவுஸ்திரேலிய பிரதமர்

எழுத்தாளர் Staff Writer

19 Mar, 2019 | 1:45 pm

Colombo (News 1st) உலகளாவிய ரீதியில் சமூக வலைத்தளங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் (Scott Morrison) வலியுறுத்தியுள்ளார்.

கடந்த வௌ்ளிக்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் நேரடி ஔிபரப்பை பேஸ்புக் நிறுவனத்தினால் தடைசெய்ய முடியாமல் போனமை குறித்தும் ஸ்கொட் மொரிசன் கண்டனம் வௌியிட்டுள்ளார்.

இது குறித்து ஜப்பானிய பிரதமர் ஷின்ஸோ அபேவிற்கு ஸ்கொட் மொரிசன் கடிதமொன்றை எழுதியுள்ளார்.

நடைபெறவுள்ள ஜீ – 20 மாநாட்டின்போது சமூக வலைத்தளங்கள் தொடர்பில் ஆராயுமாறு அந்த கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.

இதேவேளை, நியூஸிலாந்து துப்பாக்கிச் சூட்டு சம்பவம் குறைந்தது 200 தடவைகள் பார்வையிடப்பட்டுள்ளதாக, பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

50 பேர் கொல்லப்பட்ட பள்ளிவாசல் தாக்குதலின்போது, துப்பாக்கிதாரி சுமார் 17 நிமிடங்கள் நேரடி ஔிபரப்பு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்