அலுகோசு பதவிக்கான நேர்முகப் பரீட்சை பிற்போடப்பட்டது

அலுகோசு பதவிக்கான நேர்முகப் பரீட்சை பிற்போடப்பட்டது

அலுகோசு பதவிக்கான நேர்முகப் பரீட்சை பிற்போடப்பட்டது

எழுத்தாளர் Staff Writer

19 Mar, 2019 | 7:22 am

Colombo (News 1st) மரணதண்டனையை நிறைவேற்றும் அலுகோசு பதவிக்கான நேர்முகப்பரீட்சைகளை எதிர்வரும் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் நடாத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மரணதண்டனையை நிறைவேற்றும் அலுகோசு பதவிக்கான நேர்முகப்பரீட்சைகள் எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் நடைபெறவிருந்தது. ஆனால், சில காரணங்களுக்காக நேர்முகப்பரீட்சை பிற்போடப்பட்டுள்ளது.

கிடைத்த விண்ணப்பங்களிலிருந்து 79 விண்ணப்பதாரிகளை நேர்முகப்பரீட்சைக்கு அழைப்பதற்குத் தீர்மானித்துள்ளதாக, நீதிமன்றம் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

அலுகோசு பதவிக்காக 102 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன.

அமெரிக்க பிரஜை ஒருவரும் அலுகோசு பதவிக்கு விண்ணப்பித்துள்ளார்.

நேர்முகப்பரீட்சையின் பின்னர் அலுகோசு பதவிக்கு இருவர் தெரிவுசெய்யப்படுவர் எனவும் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் மரணதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளின் பெயர்ப்பட்டியல் கடந்த ஜனவரி 25 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்கு ஒப்படைக்கப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்