10 கிலோ கஞ்சாவுடன் யாழில் இருவர் கைது

10 கிலோ கஞ்சாவுடன் யாழில் இருவர் கைது

10 கிலோ கஞ்சாவுடன் யாழில் இருவர் கைது

எழுத்தாளர் Fazlullah Mubarak

18 Mar, 2019 | 8:23 am

யாழ்ப்பாணம் – ஐயக்கச்சி மற்றும் உடுத்துறை ஆகிய பகுதிக்கிடையில் 10 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருடன் இணைந்து முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போது மோட்டார் சைக்கிளில் 5 பொதிகளில் கொண்டு சென்ற சந்தர்ப்பத்திலேயே கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் குறிப்பிட்டனர்.

இதேவேளை மாத்தறை – வல்கம இராணுவத்தினரும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து முன்னெடுத்த சுற்றிவளைப்பில் 430 கிராம் கேரளா கஞ்சாவுடன் 38 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் மன்னார் பகுதியில் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் 168 போதை வில்லைகளுடன் 32 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்