பொரளை விபத்து: டிபென்டர் சாரதிக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

பொரளை விபத்து: டிபென்டர் சாரதிக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

பொரளை விபத்து: டிபென்டர் சாரதிக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

எழுத்தாளர் Staff Writer

18 Mar, 2019 | 5:50 pm

Colombo (News 1st) பொரளை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி மீது டிபெண்டர் வாகனத்தை செலுத்தி விபத்துக்குள்ளாக்கியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட உதேஷ் ரத்னாயக்க எதிர்வரும் முதலாம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு மேலதிக நீதவான் சலனி பெரேரா முன்னிலையில் சந்தேகநபரை ஆஜர்படுத்தியதை அடுத்து, விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபரான சாரதி, விபத்துக்குள்ளான டிப்பெண்டர் வாகனத்தை தாமே செலுத்தியதாக ஒப்புக்கொண்டமையால் அடையாள அணிவகுப்பு அவசியல் இல்லை என பாதிக்கப்பட்டோர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி மன்றுக்கு அறிவித்தபோதிலும், அதனை நிராகரித்த மேலதிக நீதவான் சந்தேகநபரை இன்று அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தியுள்ளார்.

பம்பலபிட்டி பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகஸ்தரால் சந்தேகநபர் இன்று அடையாளங் காணப்பட்டார்.

இன்ஸ்பெக்டர் சரத் சந்திர தனது மோட்டார்சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது, பம்பலபிட்டி பகுதியில் டிப்பெண்டர் மோதி விபத்துக்குள்ளானார்.

இது கொலை முயற்சியாக கருதி வழக்கு தாக்கல் செய்வதற்கான அனைத்து சாட்சியங்களும் காணப்படுவதாக பொலிஸார் இன்று (18ஆம் திகதி) நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்