பொகவந்தலாவயில் சட்ட விரோதமாக மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட 7 பேர் கைது

பொகவந்தலாவயில் சட்ட விரோதமாக மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட 7 பேர் கைது

பொகவந்தலாவயில் சட்ட விரோதமாக மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட 7 பேர் கைது

எழுத்தாளர் Fazlullah Mubarak

18 Mar, 2019 | 1:35 pm

பொகவந்தலாவ பகுதியில் சட்ட விரோதமாக மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

பொகவந்தலாவ கொடியாகல தோட்டம் பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி மாணிக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஐந்து பேர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடமிருந்து அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொகவந்தலாவையை சேர்ந்தவ்களே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, பொகவந்தலாவ செல்வகந்த பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் 7 பேரும் இன்று ஹற்றன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்