புத்தளம் – நாகவில்லு வாகன விபத்தில் நால்வர் உயிரிழப்பு

புத்தளம் – நாகவில்லு வாகன விபத்தில் நால்வர் உயிரிழப்பு

எழுத்தாளர் Fazlullah Mubarak

18 Mar, 2019 | 1:25 pm

புத்தளம் – நாகவில்லு பகுதியில் இடம்பெற்ற
வாகன விபத்தில் உயிரிழந்தவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் – மானிப்பாய் பகுதியை சேர்ந்த 62 வயதான பெண்ணொருவரும், யாழ்ப்பாணத்தை சேர்ந்த 51 வயதான பெண்ணொருவரும், வவுனியாவை சேர்ந்த 38 வயதான ஆணொருவரும் சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் உயிரிழந்த பெண்ணொருவர் இதுவரை அடையாளங் காணப்படவில்லை.

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு யாழ்ப்பாணத்திலிருந்து பயணித்த வேனொன்றே, இன்று அதிகலை விபத்துக்குள்ளாகியுள்ளது.

சம்பவத்தில் நால்வர் உயிரிழந்ததுடன் மேலும் நால்வர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்களில் இருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த வேனும் எதிர்திசையில் பயணித்த டிப்பர் வண்டியும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

டிப்பர் வாகன சாரதியின் கவனயீனமே, இந்த விபத்திற்கான காரணம் என தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்