நாகவில்லில் நால்வரை பலியாக்கிய கொடூர விபத்து

நாகவில்லில் நால்வரை பலியாக்கிய கொடூர விபத்து

நாகவில்லில் நால்வரை பலியாக்கிய கொடூர விபத்து

எழுத்தாளர் Fazlullah Mubarak

18 Mar, 2019 | 8:14 am

புத்தளம் – நாகவில்லு பகுதியில் இன்று அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த வேனும் எதிர்திசையில் பயணித்த டிப்பர் வண்டியும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் காயமடைந்த மேலும் நால்வர் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் இருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

விபத்தில் உயிரிழந்தவர்களில் கர்ப்பிணி பெண்ணொருவர் அடங்கலாக மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய டிப்பர் வண்டி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்