இன்று ஐ.நா. நோக்கி விரையும் இலங்கைக் குழு

இன்று ஐ.நா. நோக்கி விரையும் இலங்கைக் குழு

இன்று ஐ.நா. நோக்கி விரையும் இலங்கைக் குழு

எழுத்தாளர் Fazlullah Mubarak

18 Mar, 2019 | 8:19 am

இலங்கை விவகாரங்கள் தொடர்பில் முக்கியத்துவம் பெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் 40 ஆவது கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக இலங்கையின் தூதுக்குழுவினர் இன்று (18ஆம் திகதி) ஜெனீவா நோக்கி பயணமாகவுள்ளனர்.

வௌிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவின் தலைமையிலான இந்தக் குழுவில் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சரத் அமுனுகம, வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், வௌிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத ஆரியசிங்க மற்றும் பிரதி சொலிஷிட்டர் ஜெனரல் நெரின் பிள்ளை ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.

இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக் கூறல் மற்றும் மனித உரிமை செயற்பாடுகளின் முன்னேற்றம் ஆகியவை தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கை எதிர்வரும் 20ஆம் திகதி பேரவையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இது தொடர்பான பரிந்துரை தீர்மானம் எதிர்வரும் 21 ஆம் திகதி விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்