அர்ஜூன மகேந்திரனை ஒப்படைப்பது குறித்த கொள்கை பற்றிய கூற்றை சிங்கப்பூர் வௌியிட வேண்டும் – ஜனாதிபதி

அர்ஜூன மகேந்திரனை ஒப்படைப்பது குறித்த கொள்கை பற்றிய கூற்றை சிங்கப்பூர் வௌியிட வேண்டும் – ஜனாதிபதி

அர்ஜூன மகேந்திரனை ஒப்படைப்பது குறித்த கொள்கை பற்றிய கூற்றை சிங்கப்பூர் வௌியிட வேண்டும் – ஜனாதிபதி

எழுத்தாளர் Staff Writer

18 Mar, 2019 | 10:20 pm

Colombo (News 1st) மத்திய வங்கியின் முறிகள் மோசடிக்கு பொறுப்புக் கூற வேண்டிய முக்கிய பிரதிவாதியை இலங்கையிடம் ஒப்படைப்பது தொடர்பில் தமது கொள்கை பற்றி தௌிவான கூற்றை சிங்கப்பூர் அரசாங்கம் வௌியிட வேண்டும் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இலஞ்ச ஊழலை ஒழிக்கும் ஐந்தாண்டு திட்டத்தை வௌியிடும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைக் கூறினார்.

இலஞ்ச ஊழலை ஒழிக்கும் ஐந்தாண்டு தேசிய திட்டம் இதன் போது இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் தலைவரினால் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

ஒரு வருட காலமாக இலஞ்ச, ஊழல் சட்டத்தில் இலஞ்ச ஊழலுக்கான தண்டனை மற்றும் அதனுடன் தொடர்புடைய வேறு பலவீனமாக சட்டதிட்டங்களுடன் தொடர்பான விடயங்கள் அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் திருத்தப்பட்டு அதற்கேற்ப இந்த புதிய திட்டங்கள் அடங்கிய ஐந்தாண்டு தேசிய செயற்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்