அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர்  மஹீல் பண்டாரவிற்கு பிணை

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் மஹீல் பண்டாரவிற்கு பிணை

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் மஹீல் பண்டாரவிற்கு பிணை

எழுத்தாளர் Fazlullah Mubarak

18 Mar, 2019 | 1:32 pm

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் மஹீல் பண்டார தெஹில்தெனியவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேலதிக நீதவான் காஞ்சனா நிரஞ்சனா டி சில்வா முன்னிலையில் அவர் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து பிணை வழங்கப்பட்டுள்ளது.

ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா பெறுமதியான சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயற்படகூடாது என நீதவானால் மஹீல் பண்டார தெஹில்தெனியவிற்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

பத்தரமுல்லையில் அண்மையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, அமைதியின்மையை ஏற்படுத்தியமை தொடர்பில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் மஹீல் பண்டார தெஹில்தெனிய கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்