30 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கத்துடன் ஒருவர் கைது

30 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கத்துடன் ஒருவர் கைது

30 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கத்துடன் ஒருவர் கைது

எழுத்தாளர் Staff Writer

17 Mar, 2019 | 2:07 pm

Colombo (News 1st) சுமார் 30 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான 4 கிலோகிராம் தங்கத்தை சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவந்த இலங்கை பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர், இன்று அதிகாலை சென்னையிலிருந்து நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக, பிரதி சுங்கப்பணிப்பாளர் விபுல மினுவன்பிட்டிய தெரிவித்துள்ளார்.

49 வயதான குறித்த சந்தேகநபர் கொழும்பு – புதுக்கடை பகுதியை சேர்ந்தவராவார்.

இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 40 தங்க பிஸ்கெட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக பதில் சுங்க ஊடகப்பேச்சாளர் விபுல மினுவன்பிட்டிய மேலும் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்