மீன்களுக்கான நிர்ணயவிலையை பெறுவதற்கு நடவடிக்கை

மீன்களுக்கான நிர்ணயவிலையை பெறுவதற்கு நடவடிக்கை

by Staff Writer 17-03-2019 | 10:26 AM
Colombo (News 1st) மீன்களுக்கான நிர்ணய விலையை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக, கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சு தெரிவித்துள்ளது. உள்நாட்டு சந்தைகளில் பல்வேறு விலைகளில் மீன்கள் விற்பனை செய்யப்படுவதைக் கவனத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. கிராமப் பகுதிகளில் வாழும் மக்களுக்கும் சாதாரண விலையில் மீன்களை விற்பனை செய்வது இதன் நோக்கமாகும்.