சனிக்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

சனிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 17-03-2019 | 6:22 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. எமது நாட்டில் அரசியல் என்பது கொள்ளையடிப்பதற்கு வழங்கப்படும் அனுமதிப்பத்திரம் என அனுரகுமார திசாநாயக்க கூறியுள்ளார். 02. பொது எதிர்க்கட்சியில் உள்ளவர்களே அதிகளவில் கொக்கெய்ன் பயன்படுத்துவதோடு, அவற்றை நாட்டிற்குக் கொண்டு வருவதாக ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். 03. பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில், எம்பிலிப்பிட்டிய பிரதேச சபையின் தலைவர் எம்.கே. அமில, தலைவர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 04. கேப்பாப்புலவில் எஞ்சியுள்ள காணிகளையும் விடுவிக்க வேண்டும் என கோரி இரா.சம்பந்தன், ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார். 05. நாட்டை சூழவுள்ள கரையோரங்களை அண்மித்த பகுதிகளில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டடங்களை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வௌிநாட்டுச் செய்திகள் 01. நியூஸிலாந்தில் நடைமுறையிலுள்ள துப்பாக்கிப் பயன்பாட்டு சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் தெரிவித்துள்ளார். 02. நியூஸிலாந்து கிரைஸ்ட்சர்ச் துப்பாக்கிச்சூட்டை நடத்திய நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். விளையாட்டுச் செய்திகள் 01. கல்கிசை புனித தோமஸ் கல்லூரிக்கு எதிரான மஸ்டாங் வெற்றிக் கிண்ணத்திற்கான வருடாந்த ஒருநாள் போட்டியில் கொழும்பு ரோயல் கல்லூரி அணி 1 விக்கெட்டால் வெற்றியீட்டியது. 02. சர்வதேச கால்பந்து சம்மேளனம் சார்பில் அடுத்த ஆண்டு பெண்களுக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் உரிமையை இந்தியா பெற்றுள்ளது.