பொதுச்சொத்துக்களை தவறாகப் பயன்படுத்துவோர் மீது சட்ட நடவடிக்கை

பொதுச்சொத்துக்களை தவறாகப் பயன்படுத்துவோர் மீது சட்ட நடவடிக்கை

பொதுச்சொத்துக்களை தவறாகப் பயன்படுத்துவோர் மீது சட்ட நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

17 Mar, 2019 | 11:30 am

Colombo (News 1st ) பொதுச் சொத்துக்களை தவறாகப் பயன்படுத்துபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பது நிறுவனத் தலைவர்களின் பொறுப்பாகும் என, கடற்றொழில் மற்றும் நீரியல்வள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் திலீப் வெதஆரச்சி தெரிவித்துள்ளார்.

பொதுச் சேவைகள் குறித்து ஆராய்வதற்காக இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே இராஜாங்க அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.

கடற்றொழில் மற்றும் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சிற்கு உரித்தான நிறுவனம் ஒன்றை வேறு நபர்கள் பயன்படுத்தியதால், குறித்த நிறுவனத்திற்கு கிடைக்கவிருந்த பாரிய தொகை நிதி, கிடைக்காமல் போனதாக இந்த கலந்துரையாடலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் உடனடியாக சட்டமா அதிபரின் கவனத்திற்கு கொண்டுசென்று, சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என இதன்போது இராஜாங்க அமைச்சர் திலீப் வெதஆரச்சி மேலும் கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்